Lifetime Achievement Award - 2001 Recipient Mr.Sundara Ramaswamy
2001ம் ஆண்டு இயல் விருது கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் என்று கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக படைத்து தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராக நின்று வழிநடத்தி தமிழ் பணியாற்றிய திரு சுந்தர ராமசாமி அவர்களுக்கு அவருடைய வாழ்நாள் தமிழ் இலக்கிய சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.
Lifetime Achievement Award - 2002 Recipient Mr.K.Ganesh
2002ம் ஆண்டு இயல் விருது மணிக்கொடி பரம்பரையை சேர்ந்தவரும், மூத்த இலக்கியவாதியும், கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக தீவிர தமிழ் தொண்டாற்றி வந்தவருமான திரு கே.கணேஸ் அவர்களுக்கு அவருடைய வாழ்நாள் தமிழ் இலக்கிய சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.
Lifetime Achievement Award - 2003 Recipient Mr.Venkat Swaminathan
2003ம் ஆண்டு இயல் விருது கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கியம், நாடகம், இசை, சினிமா, சிற்பம், ஓவியம் ஆகிய பல துறை எழுத்துக்களில் தீவிரமாக இயங்கியவரும் சிறந்த விமர்சகருமான திரு வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கு அவருடைய வாழ்நாள் தமிழ் இலக்கிய சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.
Lifetime Achievement Award - 2004 Recipient Mr.R.Pathmanaba Iyer
2004ம் ஆண்டு இயல் விருது ஈழத்து நூற்பதிப்பு துறையில் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தீவிரமாக இயங்கி தமிழுக்கு பெரும் தொண்டாற்றி வரும் திரு இ.பத்மநாப ஐயருக்கு அவருடைய வாழ்நாள் தமிழ் இலக்கிய சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.
Lifetime Achievement Award - 2005 Recipient Dr. George L. Hart
2005ம் ஆண்டு இயல் விருது கடந்த பல ஆண்டுகளாக பழம் தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும், கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் தமிழ்துறை தொடங்கி அதில் பேராசிரியராக பணியாற்றியவரும், 2004ல் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதற்கு காரணமானவருமான திரு ஜோர்ஜ் எல் ஹார்ட்டுக்கு அவருடைய வாழ்நாள் தமிழ் இலக்கிய சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.
Lifetime Achievement Award - 2006 Recipient A.C.Tarcisius
2006ம் ஆண்டு இயல் விருது தமிழ் நாடகக் கலைக்காகப் பல ஆண்டுகள் பாடுபட்டு அதை உலக மட்டத்துக்கு உயர்த்தி நாடகத்துக்கும் தமிழுக்கும் ஈழத்துக்கும் புகழ் சேர்த்துவரும் திரு தாசீசியஸ் அவர்களுக்கு அவருடைய வாழ்நாள் தமிழ் இலக்கிய சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.
Lifetime Achievement Award - 2007 Recipient Lakshmi Holmstrom
2007ம் ஆண்டு இயல் விருது கடந்த இருபது ஆண்டுகளாக நவீன தமிழ் புனைகதைகள், கவிதைகள் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டு தமிழின் சிறப்பை உலகறியச் செய்து வருபவர் என்ற வகையில் திருமதி லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம் அவர்களுக்கு அவருடைய வாழ்நாள் தமிழ் இலக்கிய சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.
Lifetime Achievement Award - 2008 Recipient Ambai (Dr.C.S.Lakshmi )
2008ம் ஆண்டு இயல் விருது கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழ் எழுத்துலகில் மட்டுமன்றி தன் செயல்பாட்டை பெண்கள் வாழ்க்கையின் சகல துறைகளுக்கும் விரித்து தன் பதிவுகளை இலக்கியத்துக்கும் அப்பால் வேறு வடிவங்களுக்கும் கடத்தியவர் என்ற வகையில் அம்பை அவர்களுக்கு அவருடைய வாழ்நாள் தமிழ் இலக்கிய சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.
Scholarships
Starting in 2008, a scholarship will be given to an outstanding essay submitted by an undergraduate enrolled in a Tamil studies program.The topic for year 2010 is: Canadian Multiculturalism - A Tamil Perspective.
ANNOUNCEMENTS
The Tamil Literary Garden Lifetime Achievement Award ( Iyal Viruthu 2009) function will be held on Saturday, 17 July 2010. Venue: Seeley Hall, Trinity College, 6 Hoskin Avenue, Toronto